என் மகன் சாதிப்பார் என்று எனக்கு தெரியும்: வாஷிங்டன் சுந்தரின் தந்தை நெகிழ்ச்சி

Report Print Fathima Fathima in கிரிக்கெட்
668Shares

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தன்னுடைய மகனின் ஆட்டம் சிறப்பாக இருந்ததாக தெரிவித்துள்ளார் வாஷிங்டன் சுந்தரின் தந்தை.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கி அசத்தினார் வாஷிங்டன் சுந்தர்.

சிறப்பான பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் அசத்தியதன் மூலம் தொடரை வெல்லவும் காரணமாக இருந்தார்.

இதன்மூலம் இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் இடம்பெற்றுள்ளார், இந்நிலையில் தன்னுடைய மகன் குறித்து பெருமையாக பேசிய வாஷிங்டன் சுந்தரின் தந்தை, என் வாழ்வின் சிறந்த நாள் இதுதான்.

முதல் போட்டியிலேயே என்னுடைய மகனின் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் அபாரமாக இருந்தது, இதனை கண்டு நான் ஆச்சரியப்படவில்லை. குழந்தைப் பருவத்திலிருந்தே வாஷிங்டன் சுந்தர் அபரிதமான பேட்டிங் திறமையை நான் கண்டுள்ளேன்.

இந்த முறை ஐபிஎல் செல்லும் முன்பாக வாஷிங்டன் சுந்தர் நல்ல முறையில் பயிற்சி மேற்கொண்டு தயாராக இருந்தார். அப்போதே இந்த சீசனில் அவர் சாதிப்பார் என நினைத்தேன். இதேபோன்று சிறப்பாக வரும் காலங்களிலும் விளையாட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த போட்டியிலேயே மூன்று தமிழக வீரர்கள் விளையாடியதில் பெருமையாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்