ஐ.பி.எல் 2021... மும்பை-ராஜஸ்தான் அணியில் இருந்து விடுவிக்கப்படும் வீரர்கள் அறிவிப்பு: அதிகாரப்பூர்வ தகவல்

Report Print Santhan in கிரிக்கெட்
464Shares

ஐபிஎல் தொடரில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணியில் இருந்து விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர், இந்தாண்டு வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறவுள்ளது.

இதற்கான ஏலம் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. அதற்குள் தங்கள் அணியில் இருந்து விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை ஐபிஎல் அணிகள் அறிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதற்காக குறிப்பிட்ட நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது மும்பை அணி தங்கள் அணியில் இருந்து விடுவிக்கப்படும் ஏழு வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில், இலங்கை அணியைச் சேர்ந்த மலிங்கா, அவுஸ்திரேலியாவை சேர்ந்த நாதன் குல்டர் நைல், ஜேம்ஸ் பாட்டின்சன், நியூசிலாந்தின் மிட்சல் மெக்லானகன், மேற்கிந்திய தீவு அணியின் Sherfane Rutherford, இந்தியாவின் Digvijay Deshmukh, இந்தியாவின் முதல் தர கிரிக்கெட் வீரரான Prince Balwant Rai ஆகியோர் உள்ளனர்.

அதே போன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், தங்கள் அணியில் இருந்து விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் அவுஸ்திரேலியாவின் Steve Smith, இந்தியாவின் Varun Aaron, மேற்கிந்திய தீவு அணியின் Oshane Thomas, இந்தியாவின், Ankit Rajpoot, Shashank Singh, Anirudh Joshi, Akash Singh ஆகியோர் பெயர் உள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்