ஐ.பி.எல் 2021... CSK அணியில் இருந்து நீக்கப்படும் வீரர்கள் அறிவிப்பு: உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Report Print Santhan in கிரிக்கெட்
699Shares

ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் இருந்து நீக்கப்படும் வீரர்களின் பட்டியலை அந்தணி நிர்வாகம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடருக்கான ஏலம், அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.

இதனால் அணியில் இருந்து கழற்றிவிடப்படும் வீரர்களின் பட்டியலை வெளியிடுவதற்கு இன்றே கடைசி நாள் என்பதால், அந்தந்த அணியை சேர்ந்த நிர்வாகம், தங்கள் அணியில் இருந்து நீக்கப்படும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் சென்னை அணி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இந்தியாவின் முரளிவிஜய், அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன், இந்திய வீரர் பியூஸ் சாவ்லா, முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், மோனு சிங், கீதர் ஜாதவ் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

இதில் சின்ன தல என்று சென்னை ரசிகர்களால் அழைக்கப்படும் ரெய்னாவின் பெயர் இல்லாததால், ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்