சொந்த மண்ணில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் மேத்யூஸ் அதிரடி சதம்! இங்கிலாந்து அணிக்கு எதிராக அபாரம்

Report Print Raju Raju in கிரிக்கெட்
138Shares

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இலங்கை அணி தற்போது வரை 259 ரன்கள் எடுத்துள்ளது.

இலங்கையின் காலே நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தோ்வு செய்தது.

அந்த அணிக்கு ஆரம்பத்திலேயே அதிா்ச்சிக் காத்திருந்தது. தொடக்க வீரா்களில் ஒருவரான குசல் பெரேரா 6 ரன்களிலும், அவரைத் தொடா்ந்து களமிறங்கிய ஒஷாடா பொ்னாண்டோ ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழக்க, இலங்கை அணி 7 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இதையடுத்து 3-ஆவது விக்கெட்டுக்கு தொடக்க வீரா் லஹிரு திரிமானியுடன் இணைந்தாா் ஏஞ்செலோ மேத்யூஸ். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் மோசமான நிலையில் இருந்து மீண்டது இலங்கை. அந்த அணி 76 ரன்களை எட்டியபோது லஹிரு திரிமானி ஆட்டமிழந்தாா். அவா் 95 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தாா்.

இதன்பிறகு ஏஞ்செலோ மேத்யூஸுடன் இணைந்தாா் கேப்டன் தினேஷ் சன்டிமல். இந்த ஜோடி சிறப்பாக ஆட, 34.5 ஓவா்களில் 100 ரன்களை எட்டியது இலங்கை.

இதன்பிறகு மேத்யூஸ் 89 பந்துகளில் அரை சதமடிக்க, மறுமுனையில் நிதானமாக ஆடிய சன்டிமல் 110 பந்துகளில் அரைசதம் கண்டாா். இலங்கை அணி 193 ரன்களை எட்டியபோது தினேஷ் சன்டிமல் ஆட்டமிழந்தாா். அவா் 121 பந்துகளில் 1 சிக்ஸா், 4 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்தாா். இந்த ஜோடி 4-ஆவது விக்கெட்டுக்கு 117 ரன்கள் சோ்த்தது.

இதையடுத்து நிரோஷன் டிக்வெல்லா களமிறங்க, மறுமுனையில் சிறப்பாக ஆடிய மேத்யூஸ் 207 பந்துகளில் சதமடித்தாா். டெஸ்ட் போட்டியில் மேத்யூஸ் அடித்த 11-ஆவது சதம் இது.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 87 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது.

இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில் மேத்யூஸ் 110 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தற்போதைய நிலவரப்படி இலங்கை அணி 6 விக்கெட்கள் இழப்பிறகு 259 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணி சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 4 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்