டோனிக்கு சுத்தமாக ஆர்வம் இல்லையா? இன்னும் ஆரம்பிக்லையே? எதிர்பார்ப்பில் CSK ரசிகர்கள்

Report Print Santhan in கிரிக்கெட்
0Shares

ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் பெரிய நம்பிக்கையே டோனியாக இருக்கும் நிலையில், அவர் இன்னும் அதில் ஆர்வம் காட்டாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் இந்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான ஏலம், வரும் பிப்ரவரி மாதம் 18-ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதற்காக தங்கள் அணியில் இருக்கும் வெளியேற்றப்படும், தக்க வைத்துக் கொள்ளும் வீரர்களின் பட்டியலை அனைத்து அணிகளும் வெளியிட்டது.

கடந்த சீசனில் சொதப்பிய டோனியின் சென்னை அணி, இந்த முறை நிச்சயம் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது.

இதற்கு தீவிர பயிற்சி மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிக்காக தயார் ஆக வேண்டும். டோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், இந்த ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்தே பயிற்சியை துவங்கிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஏனெனில் கடந்த முறை டோனி அந்தளவிற்கு பயிற்சி மேற்கொள்ளவில்லை. இதனால் இந்த முறை நிச்சயம் டோனி முன்னரே தீவிர பயிற்சியில் இறங்கிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் டோனி இதுவரை கிரிக்கெட் பயிற்சி மேற்கொள்ளவில்லை. அதோடு இவர் ஜார்கண்ட் அணியுடன் சையது முஷ்டாக் கோப்பை போட்டியின் போது இணைந்து பயிற்சி மட்டும் மேற்கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதையும் டோனி செய்யவில்லை. ஐபிஎல் தொடரை அடுத்த சில மாதங்களில் வைத்துக்கொண்டு முழுக்க முழுக்க விவசாயம் மீது டோனி கவனம் செலுத்த தொடங்கி உள்ளார். கிரிக்கெட் மீது கவனம் செலுத்தாமல் முழுக்க முழுக்க விவசாயியாக டோனி களமிறங்கி உள்ளார்.

தோனியின் இந்த செயல் சிஎஸ்கே அணியில் பலருக்கு கடுப்பை ஏற்படுத்தி உள்ளது. டோனி இன்னும் கொஞ்சம் சீரியசாக இந்த தொடரை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது தான் ஒட்டு மொத்த சென்னை ரசிகர்களின் வேண்டுகோள்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்