ஜோ ரூட் கணித்தது போன்றே 2-வது டெஸ்டில் செய்து காட்டிய இந்தியா! புள்ளிப் பட்டியலிலும் முன்னேற்றம்

Report Print Santhan in கிரிக்கெட்
0Shares

இந்தியா அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் பந்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தும் என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் கூறியிருந்த நிலையில், அதே போன்றே இரண்டாவது இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அணிக்கான புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது.

இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்குவதற்கு முந்தைய நாள் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட், இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதல் பந்தில் இருந்தே கோஹ்லி எங்கள் அணிக்கு அழுத்தம் கொடுப்பார் என நம்புகிறேன்.

குறிப்பாக இந்த போட்டியில் டாஸ் எதுவாக இருந்தாலும் இது நடக்கும். உள்நாட்டில் பிரமாதமான சாதனைகளை செய்தவர் கோஹ்லி. இந்தத் தொடரின் எதாவது ஒரு தருணத்தில் வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டும் என கோஹ்லிக்கு நன்றாகவே தெரியும் என கூறியிருந்தார்.

அவர் கணித்தது போன்றே இந்திய அணி இங்கிலாந்தை இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக விளையாடி தோற்கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்