எதிர்நோக்கியுள்ளேன்!அஸ்வின் அதிரடியால் மீண்டும் எழுந்த இந்திய கிரிக்கெட் அணி... இலங்கை கிரிக்கெட் வீரர் வெளியிட்ட கருத்து

Report Print Raju Raju in கிரிக்கெட்
0Shares

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 317 ரன்களில் அபார வெற்றி பெற்றது.

முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வியடைந்த இந்திய அணி, இரண்டாவது டெஸ்டில் தமிழக வீரர் அஸ்வினின் அதிரடியால் வெற்றி கண்டது.

இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி பகல் - இரவு ஆட்டமாக குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் ஸ்டேடியத்தில் வருகிற 24-ந் திகதி தொடங்குகிறது.

இது குறித்து டுவிட்டரில் இலங்கை அணி ஜாம்பவான் அர்னால்டு, ஒரு பழிவாங்கலுடன் இந்திய அணி மீண்டு வந்திருக்கிறது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி நன்றாக முடிந்தது.

தற்போது இந்த டெஸ்ட் தொடர் அடுத்ததாக நடைபெறும் பகல் - இரவு ஆட்டம் மூலம் அழகிய கட்டத்தை அடைந்துள்ளது. அதை எதிர்நோக்கியுள்ளேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்