இந்தியாவால் செய்ய முடிந்தது... எங்களால் அதை செய்ய முடியவில்லை? தோல்விக்கு பின் நேர்மையாக பேசிய ஜோ ரூட்

Report Print Santhan in கிரிக்கெட்
0Shares

இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்ற மைதானத்தை சிலர் குறை கூறிய நிலையில், இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் அளித்த விளக்கம் அவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் இருந்தது.

இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 317 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இப்போட்டி நடைபெற்ற சென்னை மைதானம், மிகவும் மோசமாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுவே இங்கிலாந்து அணியின் தோல்விக்கு காரணம் என்று கூறப்பட்டது.

ஆனால், இங்கிலாந்து அணியின் கேப்டன் ஆன, ஜோ ரூட், மைதானம் சவாலானது தான், டாஸ் முக்கிய துவம் வாய்ந்தது தான், ஆனால் டாஸ் வென்றால் மட்டுமே ஒரு அணி ஜெயித்துவிட முடியாது.

இந்திய வீரர்கள் இந்த சவாலான ஆடுகளத்திலும் எப்படி ஆட வேண்டும் என்று எங்களுக்கு காட்டினர். மிகச்சவாலான ஆடுகளத்தில் சிறப்பாக ஆடினர்.

ஆடுகளத்தின் தன்மை எப்படியிருந்தாலும் அதை சமாளித்து இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடியதையும், தாங்கள் அதை செய்ய தவறையும் ஜோ ரூட் நேர்மையுடன் ஒப்புக் கொண்டார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்