ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்படாத நட்சத்திர வீரர்களின் பட்டியல்! பெரும் ஏமாற்றம் தான்

Report Print Santhan in கிரிக்கெட்
0Shares

ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்படாத முக்கியமான நட்சத்திர வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

சென்னையில், கடந்த 18-ஆம் திகதி ஐபிஎல் தொடருக்கான ஏலம் நடைபெற்றது, இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில், இளம் வீரர்கள் அதிகம் பேர் எடுக்கப்பட்டனர்.

ஆனால், சென்னை அணியில் எப்போதும் போல் அனுபவம் வாய்ந்த வீரர்கள் எடுக்கப்பட்டனர், இது சென்னை ரசிகர்கள் சிலரும் பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

இந்நிலையில், இந்த ஐபிஎல் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, அதிரடி வீரர்கள் சிலரை எந்த அணியும் எடுக்கவில்லை.

குறிப்பாக அதிரடி மன்னன் நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்டில், அவுஸ்திரேலியா வீரர் ஆரோன் பின்ச், நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் மெக்லானகன், இந்தியாவின் ஹனுமன் விஹாரி, வேகப்பந்து வீச்சாளர் மோகித்சர்மா போன்றோரை எந்த அணியும் எடுக்க முன் வரவில்லை.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்