சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் இலங்கை வீரர்கள் ஒருவர் கூட வாங்கப்படாத நிலையில் அது குறித்து மஹேலா ஜெயவர்தனே கருத்து தெரிவித்துள்ளார்.
இம்முறை ஐபிஎல் தொடருக்கான ஏலத்திற்கு இலங்கை வீரர்கள் பலர் பரிந்துரைக்கப்பட்ட போதும் ஒருவர் கூட தெரிவு செய்யப்படவில்லை.
இது குறித்து பேசிய இலங்கை கிரிக்கெட் ஜாம்பவானும், மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளருமான மஹேலா ஜெயவர்தனே, உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர்களைத் தெரிவு செய்வதற்கான சிறந்த களமாக ஐபிஎல் சுற்றுத்தொடரைக் குறிப்பிட முடியும்.
ஐபிஎல் போட்டிகளுக்காக எந்தவொரு இலங்கை வீரரும் தெரிவு செய்யப்படவில்லை
இலங்கை வீரர்கள் இதன் மூலம் கவலையடைந்தாலும், அவர்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டுமென்ற செய்தி இதன் மூலம் வழங்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.