இந்த தொகைக்கு... ஸ்மித் ஐபிஎல்லில் விளையாடமலே இருக்கலாம்! யார் சொல்லியிருக்கா பாருங்க

Report Print Santhan in கிரிக்கெட்
0Shares

இந்தாண்டு ஐபிஎல் ஏலத்தில் அவுஸ்திரேலியா வீரர் ஸ்டீவ் ஸ்மித் அவரின் அடிப்படை விலையில் இருந்து 20 லட்சம் ரூபாய் மட்டுமே அதிகமாக கொடுக்கப்பட்டு வாங்கப்பட்டுள்ளதால், அவர் இதற்கு விளையாடாமல் இருக்கலாம் என்று அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மைக்கல் கிளார்க் கூறியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில், அவுஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரரான ஸ்டீவ் ஸ்மித்தை டெல்லி அணி 2 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.

ஸ்டீஸ் ஸ்மித் தன்னுடைய ஆரம்ப விலையாக 2 கோடியாக நிர்ணயித்திருந்தார். குறைந்த பட்சம் இவரை அணிகள் எடுக்க போட்டி போடும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் எந்த ஒரு அணியும் ஆர்வம் காட்டாததால், அவர் வெறும் 2 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு எடுக்கப்பட்டார்.

இது குறித்து அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மைக்கள் கிளார்க் கூறுகையில், டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடக்கூடியவர் ஸ்டீவ் ஸ்மித்.

ஆனால் கடந்த ஐபிஎல் அவருக்கு அவ்வளவு சிறப்பானதாக அமையவில்லை. ஆனால் இந்தாண்டு அவரை இவ்வளவு குறைவான தொகைக்கு ஏலம் எடுப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் இதுவும் நல்ல தொகைதான்.

ஆனால், கடந்தமுறை(12.5 கோடி ரூபாய்) ஒப்பிடும்போது இது குறைவுதான். மேலும் அவர் ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாகவும் இருந்துள்ளார்.

ஐபிஎல் போட்டிக்காக அவர் 8 வாரங்கள் இந்தியாவில் செலவிட வேண்டியிருக்கும். இந்த குறைவான தொகைக்காக அவர் கிட்டத்தட்ட தன் குடும்பத்தை விட்டு பிரிந்து இருப்பார் என எனக்கு தோன்றவில்லை.

அவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடமலே இருக்காலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்