இங்கிலாந்துக்கு எதிரான டி20 அணி அறிவிப்பு: நடராஜன் உட்பட 3 தமிழக வீரர்கள் சேர்ப்பு

Report Print Arbin Arbin in கிரிக்கெட்
0Shares

இங்கிலாந்துடனான டி20 தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர்கள் நடராஜன், வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் மார்ச் 12-ம் திகதி தொடங்குகிறது.

இதற்கான இந்திய அணியை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.

இதில் வருண் சக்ரவர்த்தி, சூர்யகுமார் யாதவ், ராகுல் தெவாதியா, இஷான் கிஷன் உள்ளிட்டோர் அறிமுக வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

அனுபவ வீரர் புவனேஷ்வர் குமாரும் அணியில் இடம்பிடித்துள்ளார்.

இந்திய அணி:

விராட் கோஹ்லி (தலைவர்), ரோஹித் சர்மா (துணைத் தலைவர்), கேஎல் ராகுல், ஷிகர் தவான், ஷ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), யுஸ்வேந்திர சஹால், வருண் சக்ரவர்த்தி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ராகுல் தெவாதியா, டி நடராஜன், புவனேஷ்வர் குமார், தீபக் சஹார், நவ்தீப் சைனி, ஷர்துல் தாக்குர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்