நள்ளிரவில் எழுந்து உட்கார்ந்து கொண்டேன்! ஐபிஎல் ஏலத்தில் ரூ 15 கோடிக்கு வாங்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரபல வீரர்

Report Print Raju Raju in கிரிக்கெட்
0Shares

ஐபிஎல் ஏலத்தில் ரூ 15 கோடிக்கு வாங்கப்பட்டது குறித்து தனது மகிழ்ச்சியை கைல் ஜேமிசன் வெளிப்படுத்தியுள்ளார்.

ஆர்சிபி அணி ரூ.15 கோடிக்கு ஏலம் எடுத்ததை கேள்விப்பட்டதும் நள்ளிரவில் எழுந்து உட்கார்ந்து கொண்டேன். ரூ.15 கோடிக்கு நியூசிலாந்து டொலரில் எவ்வளவு என எனக்கு அப்போது கணக்குத் தெரியவில்லை என்று நியூசிலாந்து ஆல் ரவுண்டர் கைல் ஜேமிசன் உற்சாகமாகத் தெரிவித்துள்ளார்.

14-வது ஐபிஎல் ஏலத்தில் ஆர்சிபி அணியால் ரூ.15 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டவர் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் கைல் ஜேமிஸன்.

6.8 அடி உயரமுள்ள ஜேமிசன் 10-க்கும் குறைவான டெஸ்ட் போட்டிகளில் விளையாடினாலும் அவரின் பந்துவீச்சும், அதிரடியான ஆட்டமும் ஐபிஎல் லீக்கிற்குள் இழுத்து வந்துள்ளது.

ஐபிஎல் ஏலத்தில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள், வேகப்பந்து வீச்சாளர்களை ஏலம் எடுக்க ஒவ்வொரு அணிகளும் ஆர்வம் காட்டியது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்