இலங்கை கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான பயிற்சியாளராக இருந்த டாம் மூடி கிரிக்கெட் இயக்குநர் என்ற புதிய பணிக்காக கொழும்புக்கு வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் அரவிந்த டி சில்வா தலைமையிலான கிரிக்கெட் கமிட்டியால் புதிதாக உருவாக்கப்பட்ட இந்த நிலைப்பாடு இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் அனைத்து கிரிக்கெட் தொடர்பான விடயங்களும் பயிற்சி, உள்நாட்டு போட்டிகள், மேம்பாட்டுக் குழுக்கள், வயதுக் குழுக்கள் மற்றும் மைய ஒப்பந்த வீரர்களுக்கான குறைந்தபட்ச உடற்பயிற்சி தரநிலைகள் போன்ற விவரங்கள் உள்ளிட்டவை கிரிக்கெட் இயக்குநர் உள்ளிட்ட பதவியின் கீழ் இருக்கும்.
இதற்காக இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் முன்னாள் இலங்கை தலைமை பயிற்சியாளரான டொம் மூடியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது.