பல நாள் கனவு... நீண்ட ஆசை நிறைவேறிவிட்டது! CSK-வால் எடுக்கப்பட்ட ராபின் உத்தப்பா வெளியிட்ட வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்
0Shares

ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள ராபின் உத்தப்பா உருக்கமான வீடியோ ஒன்றை தமிழில் பேசி வெளியிட்டுள்ளார்.

கடந்த முறை ஐபிஎல் தொடரில் மோசமான தோல்விகளை சந்தித்த சென்னை அணி, இந்த முறை நிச்சயமாக பலம் வாய்ந்த இளம் வீரர்களுடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், ஐபிஎல் ஏலத்தில், சென்னை அணியின் ஏலப்பட்டியல் சில ரசிகர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. குறிப்பாக பலரும் மேக்ஸ்வேல் அல்லது ஸ்மித் இருவரில் ஒருவரை நிச்சயமாக சென்னை அணி எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும் சென்னை அணி ஒரு ஸ்டைலில் வீரர்களை எடுத்துள்ளது. குறிப்பாக ராபின் உத்தப்பாவை சென்னை அணி எடுத்துள்ளது.

இது குறித்து ராபின் உத்தப்பா முதல் முறையாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், டோனியுடன் சேர்ந்து விளையாடி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. நான் விடைபெறுவதற்குள் டோனியுடன் விளையாட வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

அது நிறைவேறிவிட்டது. அதுமட்டுமின்றி இந்த அணியில் ரெய்னா, அம்பத்தி ராயுடு போன்றோருடன் மீண்டும் இணையும் வாய்ப்பு கிடைத்துள்ளது. வாய்ப்பு கிடைத்தால், நிச்சயமாக நன்றாக விளையாடுவேன் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்