அந்த கிரிக்கெட்டில் அஸ்வின் விளையாட வாய்ப்பில்லை: காரணம் கூறிய கவாஸ்கர்

Report Print Arbin Arbin in கிரிக்கெட்
0Shares

டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடி வரும் அஸ்வினுக்கு, ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பில்லை என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் அசத்தி வரும் தமிழக சகலதுறை வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய ஒருநாள் அணியில் மீண்டும் இடம் பெற வாய்ப்பில்லை என்றும், அதற்கு அவர் சரிபடமாட்டார் எனவும் தெரிவித்துள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர்.

அஸ்வின் குறித்து கவாஸ்கர் கூறுகையில், எனக்கு தெரிந்து அஸ்வின் இந்திய கிரிக்கெட்டின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை.

ஏழாவது வரிசையில் ஹர்திக் பாண்ட்யா அந்த இடத்தை இந்த இரண்டு வடிவிலான கிரிக்கெட்டிலும் நிரப்பிவிட்டார். ஜடேஜாவும் அணியில் இருக்கிறார்.

ஆனால் எப்படியும் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு அசைக்க முடியாத வீரராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் ஜொலிப்பார் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்