மலிங்கா அவுட்.. புதிய கேப்டன் நியமனம்! மேற்கிந்திய தீவுகளுடனான ஒருநாள் மற்றும் டி-20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

Report Print Basu in கிரிக்கெட்
0Shares

மேற்கிந்திய தீவுகளுடனான ஒருநாள் மற்றும் டி-20 தொடரில் பங்கேற்கும் 20 வீரர்கள் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இல்ஙகை அணி மூன்று டி-20, மூன்று ஒருநாள் போட்டியை தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இந்நிலையில், ஒருநாள் மற்றும் டி-20 தொடரில் பங்கேற்கும் 20 வீரர்கள் அடங்கிய இலங்கை அணி விபரத்தை இலங்கை கிரிக்கெட் வெளியிட்டுள்ளது.

காயத்தில் இருந்து மீண்ட இலங்கையின் வழக்கமான டெஸ்ட் மற்றும் டி-20 அணித்தலைவர் திமுத் கருணாரத்ன அணியில் இடம்பிடித்துள்ளார், அதுமட்டுமின்றி மேற்கிந்திய தீவுக்கான ஒரு நாள் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எனினும், இலங்கையின் வழக்கமான டி-20 கேப்டனான மலிங்கா அணியில் இடம்பெறவில்லை, மலிங்காவுக்கு பதிலாக தசூன் சானக்கா டி-20 கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஒரு நாள் மற்றும் டி-20 தொடருக்கான இலங்கை அணி வீரர்களின் விபரம்: திமுத் கருணாரத்ன (ஒரு நாள் அணியின் கேப்டன்), தனுஷ்க குணதிலக்க, பதும் நிசங்கா, தினேஷ் சந்திமால், அஞ்சலோ மெத்தியூஸ், நிரோஷன் திக்வெல்ல, ஓசத பெர்னாண்டோ, அஷன் பண்டார, தசூன் சானக்க (டி-20 கேப்டன்), திசர பெரேரா, ரமேஷ் தரிந்த மெண்டிஸ், வனிந்து ஹசரங்க, துஷ்மந்த சாமர, நுவான் பிரதீப், லஹிரு குமார, அஷித பெர்னாண்டோ.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்