இலங்கை கிரிக்கெட் வீரருக்கு கொரோனா உறுதி! அணியில் புதிய மாற்றம்

Report Print Basu in கிரிக்கெட்
0Shares

இலங்கை அணி மேற்கிந்திய தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமாரவுக்கு இன்று கொரோனா உறுதியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இரண்டாவது வீரர் லஹிரு குமார ஆவார், முன்னதாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட லஹிரு திரிமன்ன, தற்போது நல்லபடியாக குணமடைந்துள்ளார்.

சமீபத்தில் மேற்கிந்திய தீவுகளுடனான ஒருநாள் மற்றும் டி-20 தொடரில் பங்கேற்கும் 20 வீரர்கள் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டது.

இதில், லஹிரு குமார இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்த்ககது. பாதிக்கப்பட்ட லஹிரு குமாரவுக்கு பதிலாக சுரங்கா லக்மல் அணியில் சேர்க்கபப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கை அணி இன்று இரவு மேற்கிந்திய தீவுக்கு புறப்படவுள்ளது, மற்ற வீரர்களுக்கான PCR சோதனை முடிவு இன்று இரவுக்குள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்