ஐபிஎல் ஏலத்தில் கண்டுகொள்ளாத வீரர்! இன்று அதிரடி மன்னன்: 4 நாள் தாமதமாக போய்விட்டதாக அஸ்வின் டுவிட்

Report Print Santhan in கிரிக்கெட்
0Shares

ஐபிஎல் ஏலத்தில் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்ட நியூசிலாந்து வீரர் டேவன் கான்வோ தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த, நான்கு நாட்கள் தாமதமாக அடிச்சுட்டேங்களே என்று இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார்.

நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியா அணி அங்கு 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

அதன் படி இரு அணிகளுக்கிடையே இன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில், நியூசிலாந்து அணி 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில், முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 184 ஓட்டங்கள் குவித்தது. குறிப்பாக நியூசிலாந்து அணி வீரர் கான்வே 59 பந்துகளில் 99 ஓட்டங்கள் அடித்து அசத்தினார்.

இது குறித்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், டிவன் கான்வே, 4 நாட்கள் தாமதமாக அடித்துவிட்டீர்களே ஆனாலும், என்ன அடி.. என பாராட்டியுள்ளார்.

இன்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கான்வே கடந்த 18-ஆம் திகதி சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில், பதிவு செய்திருந்தார். ஆனால் அவரை எந்த அணியும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்