வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க புறப்பட்டு சென்ற இலங்கை வீரர்கள்! வெளியான புகைப்படம்

Report Print Raju Raju in கிரிக்கெட்
0Shares

வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இலங்கை அணி புறப்பட்டு சென்றுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முத்தரவு கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் அணியானது இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளது.

அவர்கள் கட்டார் ஏயர்வேஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான கியூ.ஆர் -669 என்ற விமானத்தினூடாக கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று அதிகாலை 3.35 மணிக்கு புறப்பட்டுள்ளனர்.

குறித்த விமானத்தின் மூலமாக கட்டாரின் தோஹாவைச் சென்றடையும் இலங்கை அணியானது, அங்கிருந்து மற்றொரு விமானத்தினூடாக வெஸ்ட் இண்டீஸை சென்றடைகிறது.

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியினர் கிளம்பி சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இலங்கை கிரிக்கெட்டின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்