அணியுடன் மேற்கிந்திய தீவுகளுக்கு பயணிக்கத் தவறிய இலங்கை டி-20 அணி கேப்டன்! என்ன பிரச்சினை? வெளியான முக்கிய தகவல்

Report Print Basu in கிரிக்கெட்
0Shares

இலங்கை டி-20 அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள தசூன் சானக்க மேற்கிந்திய தீவுகளுக்கு அணி வீரர்களுடன் பயணம் செய்யவில்லை என இலங்கை கிரிக்கெட அறிவித்துள்ளது.

சமீபத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கான ஒருநாள் மற்றும் டி-20 அணியை இலங்கை கிரிக்கெட் அறிவித்தது. திமுத் கருணாரத்த ஒரு நாள் அணியின் கேப்டனாகவும், தசூன் சானக்க டி-20 அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், கிரிக்கெட் தொடரில் விளையாட இன்று அதிகாலை இலங்கை அணி மேற்கிந்திய தீவுகளுக்கு புறப்பட்டது.

இந்நிலையில், விசா பெறுவது தொடர்பான பிரச்சினை காரணமாக டி-20 அணி கேப்டன் தசூன் சானக்க, அணியுடன் சேர்ந்து பயணம் செய்யவில்லை என இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவிற்கான விசா அதில் முத்திரையிடப்பட்டுள்ள செல்லுபடியாகும் தனது பாஸ்போர்ட்டை இழந்ததைத் தொடர்ந்து சானக்க இந்த சிக்கலை எதிர்கொண்டார் என குறிப்பிட்டுள்ளது.

சானக்காவின் விசா பிரச்சினையை விரைவாக தீர்க்க இலங்கை கிரிக்கெட் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நெருக்கமாக செயல்பட்டு வருகிறது.

பிரச்சினை தீர்ந்ததும் அவர் அணியில் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்