14 ஐபிஎல் சீசனில் வீரர்கள் பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா? இலங்கை வீரர்கள் மட்டும் இத்தனை கோடிகளா!

Report Print Raju Raju in கிரிக்கெட்
0Shares

ஐபிஎல் வரலாற்றின் 14 சீசன்கள் மூலம் ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களுக்கு மொத்தமாக கொடுக்கப்பட்ட ஊதியம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் தொடரில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் விளையாடி வருகின்றனர். அண்மையில், சென்னையில் 2021ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் வீரர்களின் ஏலம் சென்னையில் நடைபெற்றது.

சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, பஞ்சாப் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட 8 அணிகள் தங்களுக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டுக்கொண்டு எடுத்தனர்.

இந்நிலையில், தனியார் ஸ்போர்ட்ஸ் இணையதளம் ஒன்று 14 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டியில் வீரர்களின் ஏலத்துக்காக செலவிடப்பட்ட தொகை மற்றும் எந்தெந்த நாட்டு வீரர்கள் அதிக ஊதியத்தை பெற்றுள்ளார்கள் என்ற விவரத்தை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 14 ஐ.பி.எல் போட்டிகளில் வீரர்களின் ஏலத்துக்காக மட்டும் 6,144 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும், அதில் இந்தியாவைச் சேர்ந்த வீரர்கள் அதிக ஊதியத்தை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐ.பி.எல் போட்டியில் இருந்து தற்போது நடந்து முடிந்த மினி ஐ.பி.எல் ஏலம் வரை உள்நாடு மற்றும் வெளிநாடு என 789 வீரர்கள் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.

14 ஐ.பி.எல் தொடர்களில் நாடுகள் வாரியாக வீரர்கள் பெற்ற ஊதியம் :

இந்தியா - ரூ.3,433 கோடி

அவுஸ்திரேலியா - ரூ.905.9 கோடி (94 வீரர்கள்)

தென் ஆப்பிரிக்கா - ரூ.539 கோடி (56 வீரர்கள்)

வெஸ்ட் இண்டீஸ் - ரூ.458 கோடி (33 வீரர்கள்)

இங்கிலாந்து - ரூ.285.96 கோடி (33 வீரர்கள்)

நியூசிலாந்து - ரூ.211..6 கோடி (31 வீரர்கள்)

இலங்கை - ரூ.195.93 கோடி (27 வீரர்கள்)

ஆப்கானிஸ்தான் - ரூ.58.4 கோடி (4 வீரர்கள்)

வங்கதேசம் - ரூ.34.78 கோடி (6 வீரர்கள்)

பாகிஸ்தான் - ரூ.12.84 கோடி(11 வீரர்கள்)

நெதர்லாந்து - ரூ.5.27 கோடி (2 வீரர்கள்)

ஜிம்பாபே - ரூ.1 கோடி ( 3 வீரர்கள்)

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்