இலங்கை அணியுடனான தொடரா? அல்லது ஐபிஎல் தொடரா? ரு 1 கோடிக்கு ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்ட பிரபல வீரர் எடுத்த முடிவு

Report Print Raju Raju in கிரிக்கெட்
0Shares

ஐபிஎல் ஏலத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட வங்கதேச அணி வீரர் முஷ்டாபிஜுர் ரஹ்மானுக்கு கிரிக்கெட் விளையாடுவது தொடர்பில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஐபிஎல் ஏலத்தில் முஷ்டாபிஜுர் ரஹ்மானை ஒரு கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடர் ஏப்ரல்- மே- ஜூன் மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்த நேரத்தில் வங்காளதேச டெஸ்ட் கிரிக்கெட் அணி இலங்கையுடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறது.

இலங்கை அணி டெஸ்ட் போட்டியில் விளையாடும்படி தெரிவித்தால் கட்டாயம் நாட்டிற்காக விளையாடுவேன் என முஷ்டாபிஜுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முஷ்டாபிஜுர் ரஹ்மான் கூறுகையில் வங்காளதேச கிரிக்கெட் போர்டு என விரும்புகிறதோ, அதை நான் செய்வேன். அவர்கள் என்னை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட கேட்டுக்கொண்டால், நான் கட்டாயம் விளையாடுவேன்.

அவர்கள் என்னை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட வேண்டாம் என்று விரும்பினால், அதன்பின் நான் என்ன செய்வேன் என்பது உங்களுக்குத் தெரியும். என்னுடைய முதல் முன்னுரிமை நாட்டிற்காக தான் இருக்கும் என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்