எங்களின் ஒரே இலக்கு இதுதான்! தொடரை வெல்லும் நோக்கில் இந்திய அணி களமிறங்கும் நிலையில் விராட் கோஹ்லி அதிரடி

Report Print Raju Raju in கிரிக்கெட்
0Shares

இங்கிலாந்து அணி உடனான கடைசி இரண்டு போட்டிகளிலும் வெல்ல வேண்டும் என்பதே எங்களின் ஒரே இலக்கு என விராட் கோஹ்லி கூறியுள்ளார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று மதியம் துவங்க உள்ளது.

இப்போட்டி பகலிரவு டெஸ்ட் ஆட்டமாக நடைபெற உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து விராட் கோஹ்லி பேசுகையில், ஒரு போட்டியில் வெற்றி பெற்று ஒரு போட்டியை டிரா செய்தாலே இந்திய அணி தொடரை வென்றுவிடலாம் என்று நாங்கள் நினைக்கவில்லை.

எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெறுவது மட்டுமே எங்கள் நோக்கம். முதலில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முழு கவனத்தையும் செலுத்திவிட்டு, அது முடிந்த பிறகு கடைசி டெஸ்ட் போட்டியில் கவனம் செலுத்துவோம் என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்