ஓய்வு பெறும்போது டோனி தன்னிடம் என்ன சொன்னார்? 7 ஆண்டுகளுக்கு பின் அந்த அதிர்ச்சி தருணத்தை வெளிப்படுத்திய இஷாந்த சர்மா

Report Print Basu in கிரிக்கெட்
0Shares

டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறும்போது டோனி தன்னிடம் சொன்னதை இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த சர்மா வெளிப்படுத்தியுள்ளார்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா தனது 100-வது டெஸ்டை விளையாடவுள்ளார்.

இன்று அகமாதபாத்தில் நடக்கும் இந்தியா-இங்கிலாந்து இடையேயான 3வது டெஸ்ட் போட்டி, இஷாந்த் சர்மா விளையாடும்100-வது டெஸ்ட் ஆகும்.

கிரிக்கெட் வாழ்க்கையில் புதிய மைல்கல்லை எட்டும் இஷாந்த், 2014 மெல்ர்பர்னில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது முன்னாள் கேப்டன் டோனி தனக்கு அளித்த அதிர்ச்சியை பகிர்ந்துள்ளார்.

2014 டிசம்பர் மாதம் டோனி டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார். 2014 டிசம்பர் மெல்பர்னில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக டோனி தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்து.

இஷாந்த கூறியதாவது, மெல்பர்ன் டெஸ்ட் போட்டியின் போது எனக்கு முழங்காலில் வலி இருந்ததால் நான் ஒவ்வொரு session-க்கும் ஊசிகள் போட்டுக்கொண்டேன்.

அந்த போட்டியுடன் டோனி ஓய்வு பெற போகிறார் என யாருக்கும் தெரியாது. போட்டியின் 4வது நாள் அவுஸ்திரேலிய டிக்ளர் அறிவிக்கவிருந்தது, அப்போது இனி என்னால் ஊசி போட்டுக்கொள்ள முடியாது என டோனியிடம் கூறினேன். பரவாயில்லை, நீ இப்போது பந்து வீச வேண்டாம் என கூறினார்.

பின்னர் ‘எனது கடைசி டெஸ்ட் போட்டியில் நீ என்னை பாதியிலே விட்டுவிட்டாய்’ என அவர் என்னிடம் கூறினார்.

இதை கேட்டு நான் அதிர்ந்து போனேன். எனக்கு தெரிந்திருந்தால் கண்டிப்பாக நான் தொடர்ந்து வினையாடி இருப்பேன் என அவரிடம் கூறினேன்.

போட்டியின் கடைசி நாள் வரை அவர் ஓய்வு பெறபோகிறார் என்பது எனக்கு தெரியாது.

டோனி எப்போதும் அணியின் நலனை குறித்தே சிந்திப்பார். அவர் 100 டெஸ்ட் போட்டிகளுக்கு அருகில் இருந்தபோதிலும், எப்போதும் அணிக்கான வீரராக இருந்தார்.

நாங்கள் இங்கிலாந்தில் இருந்தபோது, அவர் நூறு டெஸ்ட் விளையாடுவது முக்கியமல்ல என்று அவர் என்னிடம் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது.

அதற்கு பதிலாக, நாம் சஹாவை தயார் படுத்தும் பணியை தொடங்க வேண்டும் என்று அவர் நினைத்தார்.

அதனால் தான் அவர் ஓய்வு பெறுவதற்கான திடீர் முடிவை எடுத்தார், நான் நினைக்கிறேன் என்று இஷாந்த் கூறினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்