கோஹ்லி ஆக்ரோஷம்! 3-வது டெஸ்ட்டில் இங்கிலாந்து திணறல்: ரூட்டை கெட்ட வார்த்தை கூறி வழியனுப்பிய வீடியோ காட்சி

Report Print Santhan in கிரிக்கெட்
0Shares

இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், ஜோ ரூட் ஆட்டமிழந்ததும், அவரை கெட்ட வார்த்தை சொல்லி கோஹ்லி வழியனுப்பும் வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, பகல்-இரவு ஆட்டமாக அகமதாபாத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

அதன் படி முதலில் ஆடிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல், 112 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆனது.

அதன் பின் முதல் இன்னிங்ஸ் ஆடி வரும் இந்திய அணி சற்று முன் வரை 3 விக்கெட் இழப்பிற்கு 99 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.

இப்போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது அபாரமான பந்து வீச்சின் மூலம் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்டை எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் வைத்து வெளியேற்றினார்.

அப்போது கோஹ்லி வழக்கம் போல், ஆக்ரோசத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக ஆங்கிலத்தில் பயன்படுத்தும் ஒரு கெட்ட வார்த்தை கூறி உள்ளார். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்