ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்படாத இலங்கை அணி வீரர்கள்! அது தொடர்பில் முதல் முறையாக பேசிய ஜாம்பவான் குமார் சங்ககாரா

Report Print Raju Raju in கிரிக்கெட்
0Shares

ஐபிஎல் ஏலத்தில் இலங்கை வீரர்கள் யாரும் வாங்கப்படாதது தொடர்பில் குமார் சங்ககாரா பேசியுள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டு தொடங்கி இன்று வரை நடத்தப்பட்டு வரும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல் தொடரில் இதுவரை 13வது சீசன்கள் நிறைவடைந்துள்ளன.

இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடர் ஏப்ரல் மே மாதங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்தாண்டு நடக்க இருக்கும் ஐபிஎல் தொடருக்கான ஏலம் சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்துள்ளது.

இந்த ஏலத்தில் இலங்கை வீரர்கள் யாரும் வாங்கப்படவில்லை.

இது ரசிகர்களிடையே பெரிய கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த கேள்வி குறித்து பேசிய இலங்கை கிரிக்கெட் ஜாம்பவானும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இயக்குனருமான சங்ககாரா, இலங்கை கிரிக்கெட் வாரியம் எப்போது வேண்டுமானாலும் வெளியூர் தொடருக்கு வீரர்களை அழைக்கும்.

அப்படி அழைக்கும் வேளையில் இலங்கை வீரர்களால் ஐபிஎல் தொடரில் முழுமையாக பங்கெடுக்க முடியாது.இதுவே காரணம் என்று பதிலளித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்