ஜோ ரூட் சுழலில் சுருண்டது இந்தியா! 2வது இன்னிங்ஸில் மளமளவென 2 விக்கெட்டுகளை பறிகொடுத்த இங்கிலாந்து

Report Print Basu in கிரிக்கெட்
0Shares

அகமதாபாத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 145 ஓட்டங்களுக்கு சுருண்டது.

4 போட்டிகள் கொண்ட இந்தியா-இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரில் 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான பகல்-இரவு பிங்க் பந்து 3வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று தொடங்கியது.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 112 ஓட்டங்களுக்கு சுருண்டது.

டொமினிக் சிபிலி (0), Crawley (53), ஜானி பாரிஸ்டோ (0), ஜோ ரூட் (27), பென் ஸ்டோக்ஸ் (6), ஒல்லி போப் (1), பென் போக்ஸ் (12), ஆர்ச்சர் (11), ஜேக் லீச் (3), ஸ்டூவர்ட் பிராட் (3).

இந்திய தரப்பில் பந்து வீச்சில் அக்‌ஷர் படேல் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், இஷாந்த சர்மா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதை தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 99 ஓட்டங்கள் எடுத்திருந்து.

இன்று இரண்டாவது நாள் தொடர்ந்து விளையாடி இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 145 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதன் மூலம் இந்திய அணி 33 ஓட்டங்கள் முன்னிலைப்பெற்றது.

ரோகித் சர்மா (66), சுபம் கில் (11), புஜாரா (0), கோஹ்லி (27), ரஹானே (7), ரிஷப் பண்ட் (1), வாஷிங்டன் சுந்தர் (0), அஸ்வின் (17), அக்‌ஷர் படேல் (0), பும்ரா (1).

இஷாந்த் சர்மா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 10 ஓட்டங்கள் எடுத்தார், அதுமட்மின்றி 2007-ல் தனது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய இஷாந்த் சர்மா இன்று தனது முதல் டெஸ்ட் சிக்ஸை அடித்தார்.

இங்கிலாந்து தரப்பில் கேப்டன் ஜோ ரூட் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார், ஜாக் லீச் 4 விக்கெட்டுகளையும், ஆர்ச்சர் 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

33 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 0 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்