டோனியின் சாதனையை ஊதி தள்ளிய விராட் கோஹ்லி! அணித்தலைவராகவும் தான் கெத்து என நிரூபணம்

Report Print Raju Raju in கிரிக்கெட்
0Shares

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்ற நிலையில் விராட் கோஹ்லி புதிய சாதனையை படைத்துள்ளார்.

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இதன் மூலம் இந்திய மண்ணில் 29 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை தாங்கிய விராட் கோஹ்லி 22 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று, முன்னாள் கேப்டன் டோனியின் சாதனையை முறியடித்தார்.

இதற்கு முன்பு டோனி சொந்த மண்ணில் 30 போட்டிகளுக்கு 21 போட்டிகள் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்