அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இந்திய நட்சத்திர வீரர் ஓய்வு

Report Print Basu in கிரிக்கெட்
0Shares

அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய நட்சத்திர ஆல்-ரவுண்டர் யூசப் பதான் அறிவித்துள்ளார்.

38 வயதான யூசப் பதான், 2007-ல் டி-20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியிலும், 2011-ல் 50 ஓவர் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியிலும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனக்கு அன்பும் ஆதரவும் அளித்த என் குடும்பத்தினர், ரசிகர்கள், அணிகள் மற்றும் பயிற்சியாளர்கள் என அனைவருக்கும் இதயம்கணிந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என யூசப் பதான் டவிட்டரில் பதிவிட்டள்ளார்.

டி-20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக தனது முதல் சர்வதேச போட்டியில் களமிறங்கிய யூசப் பதான், இந்திய அணிக்காக இதுவரை 22 டி-20 போட்டிகளில் விளையாடி 236 ஓட்டங்கள் எடுத்துள்ளார். பந்துவீச்சில் 33 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

2008-ல் பாகிஸ்தானுக்கு எதிரான தனது முதல் ஒரு நாள் போட்டியில் களமிறங்கிய யூசப் பதான், இந்திய அணிக்காக மொத்தம் 57 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அதில், 2 சதம், 3 அரைசதம் என 810 ஓட்டங்கள் எடுத்துள்ளார், பந்து வீச்சில் 13 விக்கெட்கள் எடுத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் 174 போட்டிகளில் 1 சதம், 13 அரைசதம் என 3204 ஓட்டங்கள் எடுத்துள்ளார், பந்து வீச்சில் 42 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்