வங்கதேச அணிக்கு இதை செய்யாமல் நான் ஓய்வு பெறமாட்டேன்! உலகின் தலை சிறந்த ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் சபதம்

Report Print Santhan in கிரிக்கெட்
0Shares

வங்கதேச அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ஷகிப் அல் ஹசன் தன்னுடைய ஓய்வு குறித்து முதன் முறையாக பேசியுள்ளார்.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வங்கதேச அணி, அங்கு மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 தொடர்களில் விளையாடியது.

இதில் இரண்டு தொடர்களிலும் வங்கதேச அணி முழுமையாக இழந்து, வொயிட் வாஷ் அனது. இதனால் வங்கதேச அணி கடும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.

இந்நிலையில், வங்கதேச அணி வீரரும், உலகின் தலை சிறந்த ஆல் ரவுண்டருமான ஷகிப் அல் ஹசன், தன்னுடைய ஓய்வு குறித்து பேசியுள்ளார்.

அதில், வங்கதேச அணி 6 போட்டிகளிலும் தோற்று உள்ளது. 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 6 போட்டிகளில் தோற்று, ஒயிட் வாஷ் பெயரை வாங்கியுள்ளது.

நான் வங்கதேச அணி வீரர்களிடம் நடந்ததைபற்றிப் பேசாமல் இனி எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்தும் எவ்வாறு ஆட்டத்தை அணுக வேண்டும் என்பது குறித்தும் அவர்களுடன் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் பேசுவேன்.

நான் ஓய்வு பெறும்பொழுது சந்தோஷமாக மகிழ்ச்சியாக மட்டுமே ஓய்வு பெறுவேன். எனவே 2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வங்கதேச அணி வென்றால் நிச்சயம் சந்தோசமாக ஓய்வு பெற்றுவிடுவேன்.

ஒருவேளை வங்கதேச அணியை வெல்ல தவறினால், நிச்சயம் அதற்கு அடுத்த உலக கோப்பை தொடரில் மீண்டும் விளையாடுவேன் என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்