கிரிக்கட் போட்டியில் ஹாட்லி கல்லூரியை வென்றது மாத்தறை ராஹுல கல்லூரி!

Report Print Samaran Samaran in கிரிக்கெட்
கிரிக்கட் போட்டியில் ஹாட்லி கல்லூரியை வென்றது மாத்தறை ராஹுல கல்லூரி!

பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி அணிக்கும், மாத்தறை ராஹுல கல்லூரி அணிக்கும் இடையே இன்றையதினம்(08-04-2018) இடம்பெற்ற நட்புறவு கிரிக்கட் போட்டியில் மாத்தறை ராஹுல கல்லூரி அணி 5 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.

குறித்த போட்டி இன்றையதினம் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி 38.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 89 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் டிலக்ஸன் 31 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.

பந்து வீச்சில் ராஹுல கல்லூரி சார்பில் சசித் மனுரங்க 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு இலகுவான இலக்குடன் துடுப்பாடிய மாத்தறை ராஹுல கல்லூரி அணி 13.4 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 90 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

வடக்கு, தெற்கு உறவுப் பாலமாக இரண்டாவது வருடம் நடத்தப்பட்ட இரண்டு கல்லூரி அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டியில்

இரண்டாவது முறையும் மாத்தறை ராஹுல கல்லூரி வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்