டோனிக்கு சென்னைனா உசுரு! காவிரி பிரச்சினையை தலகிட்ட சொல்லுங்க: சிம்பு கோரிக்கை!

Report Print Samaran Samaran in கிரிக்கெட்

காவிரி பிரச்சனை தொடர்பாக நடிகர் சிம்பு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனிக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது, ஸ்டெர்லைட் என்று போராட்டம் நடந்து வருகிறது.

இதில், அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என்று பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இது குறித்து சிம்பு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனிக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் காவிரி பிரச்சனை, ஸ்டெர்லைட் பிரச்சனைன்னு போய்க்கிட்டிருக்கு.

இந்த நேரத்தில், ஐபிஎல் ஆரம்பமாகிவிட்டது.

நம் வாழ்க்கையே ஒரு போராட்டமாக இருக்கும் இந்த நேரத்தில் இப்படியொரு விளையாட்டு தேவையா என்று பலரும் கேட்கிறார்கள்.

இதனை புறக்கணிக்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள். உண்மை தான்.

இப்போது தான் சென்னை சூப்பர் கிங்ஸ் வந்துள்ளது.

இது குறித்து அப்பாவிடம் பேசும்போது, அவர் சொன்னார், ஐபிஎல் பார்க்கும் போது கருப்பு சட்டை போட்டு போங்கள் என்று சொன்னார்.

இது யார் சொன்னாலும் பிரச்சனை தான்.

இதுல, நான் என்ன சொல்ல வருகிறேன் என்று தெரியுமா? எங்களை உள்ளே விடுங்கள்.

மற்றதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.

அதாவது ஐபிஎல்லை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்ல வருகிறேன் என்று கூறியுள்ளார்.

தோனி மீது மிகுந்த நம்பிக்கை உண்டு.

அவர் தமிழ்நாட்டின் மீதும், சென்னை மக்கள் மீதும் அதிகமாக அன்பு வைத்துள்ளார்.

அவர் கண்டிப்பாக இந்தப் பிரச்சனையை பார்ப்பார்.

அவரும், இந்த போராட்டத்தில் இறங்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை.

உங்களால் செய்யமுடியும் சாதாரணம் விஷயத்தை யாதவது ஒரு ரூபத்தில் எங்களுக்காக செய்யுங்கள் என்று கோரிக்கை வைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்