பதினொரு வீரர்களை கொண்டு எங்களை சாய்த்து விடலாம் என்று பார்த்தாயா: தமிழ் புலவர் ஹர்பஜன் டுவிட்டரில் சீற்றம்!

Report Print Samaran Samaran in கிரிக்கெட்
156Shares
156Shares
ibctamil.com

சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் இம்முறை ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

அணியில் இணைந்தது முதலே தமிழில் அவ்வப்போது ட்விட் செய்து ரசிகர்களை அதிர வைப்பார்.

ஒவ்வொரு போட்டி முடிவிலும் அவர் தமிழில் என்ன பதிவிட உள்ளார் என பலர் எதிர்பார்க்க தொடங்கிவிட்டனர்.

இன்று நடைபெற்ற ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

இதனால் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் சென்னை அணி ஏறக்குறைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது.

இந்நிலையில், ஐதராபாத் அணியிடம் சென்னை அணி வெற்றி பெற்றது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஹர்பஜன் சிங் பதிவிட்டுள்ளதாவது,

“ஓங்கி இடிஇடித்து,ஓயாமல் மின்னல் வெட்டி,பல மணிநேரம் நிக்காமல் நெரம்பபபெய்த, வரதா புயலால் சென்னைய ஒன்றும் செய்ய இயலவில்லை.

பதினொன்று வீரர்களை கொண்டு எங்களை சாய்த்து விடலாம் என்று பார்த்தாயா.

இது தலை நிமிர்ந்து நடை போடும்

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்