புதிய வரலாற்று சாதனை படைத்த அலஸ்டயர் குக்!

Report Print Samaran Samaran in கிரிக்கெட்

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று முந்தினம் ஆரம்பமாகியது.

இப் போட்டியில் சமர்செட் கழகத்தின் சுழற்பந்து வீச்சாளர் டொம் பெஸ், இங்கிலாந்து சார்பாக டெஸ்ட் போட்டிகளுக்கு அறிமுகமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

29 வயதான டொம் பெஸ், 16 முதற்தரப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அத்துடன் க்றிஸ் வோக்ஸ் அல்லது மார்க்வுட் ஆகியோரில் ஒருவரை அணியில் உள்வாங்குவது குறித்து இறுதி நேரத்தில் தீர்மானிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

போட்டி நடைபெறுகின்ற ஆடுகளம், பெரும்பாலும் வேகப்பந்து வீச்சுக்கு சாதமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதேவேளை இன்றைய போட்டியில் விளையாடும் அலஸ்டயர் குக், தொடர்ந்து 153 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி சாதனைப் படைத்திருந்த அலன் போர்டரின் சாதனையை முறியடித்துள்ளார்.

குக் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானதன் பின்னர் தமது மூன்றாது டெஸ்ட் போட்டியில் மாத்திரமே விளையாடாமல் ஓய்வில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்