கே.சி.சி.சி. வெற்றிக் கிண்ணத்தை வென்றது ஸ்கந்தாஸ்ரார் அணி!

Report Print Samaran Samaran in கிரிக்கெட்
22Shares
22Shares
lankasrimarket.com

கே.சி.சி.சி வெற்றிக் கிண்ண வெள்ளி விழா தொடரின் 4 ஆவது போட்டி நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற போது ஸ்கந்தாஸ்ரார் அணி, ஹாட்லியைற்ஸ் அணியை 5 இலக்குகளால் வெற்றி பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஹாட்லியைற்ஸ் அணி 26.3 ஓவர்களில் சகல இலக்குகளையும் இழந்து 151 ஓட்டங்களைப் பெற்றனர்.

சாகித்தியன்-14, மணி மாறன்-33, சதீஸ்-13, பிரசாந்-16, பிரதீப்-28, புருசோத்மன்-17 ஓட்டங்களைப் பெற் றனர்.

களத்தடுப்பில் ஸ்கந்தா ஸ்ரார் அணிசார்பாக புருசோ த்மன், சோபிதன், தரணிதரன், அஜின் தலா ஒரு இலக்கி னையும் துவாரகன்-2 பிரசான் -3 இலக்கினையும் கைப்பற்றி னர்.

பதிலுக்குத் துடுப்பெடு த்தாடிய ஸ்கந்தா ஸ்ரார் அணி 14.5 ஓவர்களில் 5 இலக்குகளை இழந்து 152 ஓட்டங்களைப் பெற்றனர்.

மிதுசாந்-28, சதீஸ்-60, துவாரகன்-28, அஜன்தன்-11, சயந்தன் ஆட்டமிழக்காது-10 ஓட்டங்களைப் பெற்றனர்.

களத்தடுப்பில் ஹாட்லி யைற்ஸ் அணி சார்பாக நிஷாந்தன்-04 இலக்கு களை கைப்பற்றினார்.

இப் போட்டியின் மூலம் யாழ்.சென்றல் விளையாட் டுக்கழகம் 9 ஆவது ஆண் டாக நடத்தும் யாழ். நகரில் சிறந்த கழக அணித் தெரிவு நிகழ்வுக்கு (தரவரிசை பட்டியல்) ஸ்கந்தாஸ்ரார் அணி 6.02 புள்ளிகளையும் ஹாட் லியைற்ஸ் அணி 2.01 புள்ளி களையும் பெற் றுக் கொண்டது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்