வட­மா­காண துடுப்­பாட்­டத்தில் ஸ்கந்தாவை வீழ்த்தி வெற்றி பெற்ற நெல்­லி­யடி மத்­திய கல்­லூரி!

Report Print Samaran Samaran in கிரிக்கெட்
25Shares
25Shares
lankasrimarket.com

வட­மா­காண கல்வித் திணைக்­க­ளம் நடத்­திய வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான துடுப்­பாட்­டத் தொட­ரில் 20 வயது ஆண்­கள் பிரி­வில் நெல்­லி­யடி மத்­திய கல்­லூரி அணி சம்­பி­யன் கிண்­ணத்­தைச் சுவீ­க­ரித்­தது.

யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூ­ரி­யின் மைதானத்­தில் அண்­மை­யில் இந்த இறு­தி­யாட்­டம் இடம்­பெற்­றது.

நெல்­லி­யடி மத்­திய கல்­லூரி அணியை எதிர்த்து சுன்­னா­கம் ஸ்கந்­த­வ­ரோ­த­யக் கல்­லூரி அணி மோதி­யது.

முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய சுன்­னா­கம் ஸ்கந்­த­வ­ரோ­த­யக் கல்­லூரி அணி 5.2 பந்­துப் பரி­மாற்­றங்­க­ளில் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்து 23 ஓட்­டங்­களை மாத்­தி­ரம் பெற்­றது.

அதிக பட்­ச­மாக அன்­ரிவ் 4 ஓட்­டங்­க­ளைப் பெற்­றார்.

பந்­து­வீச்­சில் நெல்­லி­யடி மத்­திய கல்­லூரி அணி சார்­பில் கிரு­சி­கன் 3, வனி­தன் 2, தர்­சி­கன் 2 இலக்­கு­க­ளை­யும் அனோ­ஜன் மற்­றும் பிர­தீ­பன் ஆகி­யோர் ஒவ்­வொரு இலக்­கை­யும் கைப்­பற்றினர்.

பதி­லுக்­குத் துடுப்­பெ­டுத்­தா­டிய நெல்­லி­யடி மத்­திய கல்­லூரி அணி 4.3 பந்­துப் பரி­மாற்­றங்­க­ளில் 4 இலக்­கு­களை மாத்­தி­ரம் இழந்து 25 ஓட்­டங்­களை பெற்று 6 இலக்­கு­க­ளால் வெற்­றி­பெற்று சம்­பி­யன் கிண்­ணத்­தைச் சுவீ­க­ரித்­தது.

அதி­க­பட்­ச­மாக பிர­வீன் ஆட்­டம் இழக்­கா­மல் 14, வனி­தன் ஆட்­டம் இழக்­கா­மல் 6 ஓட்­டங்­க­ளைப் பெற்­ற­னர்.

பந்­து­வீச்­சில் சுன்­னா­கம் ஸ்கந்­த­வ­ரோ­த­யாக் கல்­லூரி அணி சார்­பில் சோபி ­தன் 2, பிர­சன் ஒரு இலக்­கை­யும் கைப்­பற்­றி­னர்.

சிறந்த கிரிக்­கெட் வீர­ராக நெல்­லி­யடி மத்­திய கல்­லூ­ரியை பிர­தி­நி­தித்­து­வம் செய்த வனி­தன் தெரிவு செய்­யப்­பட்­டார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்