இங்கிலாந்தில் அதிரடி காட்ட தயாராகும் இரும்பு மனிதன் திஸர பெரேரா!

Report Print Samaran Samaran in கிரிக்கெட்
264Shares
264Shares
lankasrimarket.com

இங்கிலாந்து உள்ளூர் கழகமான க்ளொஸ்டர்ஷெயார் அணிக்கு இலங்கை அணியின் நட்சத்திர சகலதுறை ஆட்டக்காரரான திஸர பெரேரா மீண்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி, இங்கிலாந்தில் தற்போது நடைபெற்று வருகின்ற வைட்டாலிட்டி பிளாஸ்ட் டி-20 (Vitality Blast) தொடரில் இன்றும் (06), நாளை மறுதினமும் (08) நடைபெறவுள்ள சமர்செட் மற்றும் மிட்ல்செக்ஸ ஆகிய அணிகளுடனான முதலிரண்டு போட்டிகளிலும் திஸர பெரேரா களமிறங்கவுள்ளதாக அவ்வணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

29 வயதான திஸர பெரேரா, கடந்த வருடம் க்ளொஸ்டர்ஷெயார் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

இதில் இங்கிலாந்து உள்ளூர் கழகங்களுக்கிடையில் நடைபெற்று வருகின்ற நெட்வெஸ்ட் டி20 பிளாஸ்ட் போட்டிகளில் முதற்தடவையாக விளையாடியிருந்தார்.

எனினும், முன்னதாக அவுஸ்திரேலிய வீரர் அன்ட்ரூ டை, அவ்வணிக்காக கடந்த வருடம் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ஆனால், அவரது தோள்பட்டையில் ஏற்பட்ட உபாதை காரணமாக திஸர பெரேராவை அவருக்குப் பதிலாக இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதேபோல இவ்வருடமும், அன்ட்ரூ டை அவ்வணிக்காக விளையாட இருந்த போதிலும், ஜிம்பாப்வேயில் தற்போது நடைபெற்றுவருகின்ற முத்தரப்பு டி-20 தொடரில் அவுஸ்திரேலிய அணியில் விளையாடி வருகின்றார்.

எனவே, முத்தரப்பு தொடர் நிறைவடைந்து அன்ட்ரூ டை அணிக்கு திரும்பும்வரை திஸர பெரேராவை முதலிரண்டு போட்டிகளுக்காக மாத்திரம் இணைத்துக்கொள்ள க்ளொஸ்டர்ஷெயார் அணி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுதொடர்பில் க்ளொஸ்டர்ஷெயார் அணியின் நிறைவேற்று அதிகாரி வில் பிரௌவ்ன் கருத்து வெளியிடுகையில், திஸர பெரேராவை மீண்டும் அணியுடன் இணைத்துக்கொள்ள முடிந்தமை மகிழ்ச்சியளிக்கிறது.

உலகின் தலைசிறந்த சகலதுறை வீரர்களில் ஒருவராக விளங்குகின்ற திஸர, கடந்த வருடமும் எமது அணிக்காக சிறப்பாக விளையாடியிருந்தார்.

பிக் பேஷ், ஐ.பி.எல் உள்ளிட்ட போட்டிகளில் விளையாடிய அனுபவத்தைக் கொண்டுள்ள திஸரவின் வருகையானது எமது அணிக்கு சிறந்த ஆரம்பத்தைக் கொடுக்கும்” என தெரிவித்தார்.

எனினும், கனடா கிரிக்கெட் சபையினால் முதற்தடவையாக நடத்தப்படுகின்ற குளோபல் டி-20 பிரீமியர் லீக போட்டித் தொடரில் லசித் மாலிங்க தலைமையிலான மொன்ட்ரியல் டைகர்ஸ் அணியில் திசர பெரேரா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

ஆனால், இம்மாதம் ஆரம்பமாகவுள்ள தென்னாபிரிக்க அணியுடனான கிரிக்கெட் தொடரை கருத்திற்கொண்டு குளோபல் டி-20 தொடரில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வழங்காமல் விடுவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தது.

கிரிக்கெட் உலகில் பல்வேறு நாடுகளினால் நடத்தப்படுகின்ற டி-20 தொடர்களில் அண்மைக்காலமாக விளையாடி வரும் திஸர, இதுவரை 73 டி-20 போட்டிகளில் விளையாடி 1,020 ஓட்டங்களையும், 50 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்