கிளிநொச்சியில் முழு நிலவுக் கலைவிழா

Report Print Suman Suman in கலாச்சாரம்

கிளிநொச்சியில் முழு நிலவுக் கலைவிழா நிகழ்வில் நிலவின் முற்றம் பாகம் இரண்டு நேற்று மாலை ஆறு மணியளவில் பண்டிதர் பரந்தாமன் கவின்கலை கல்லூரியும் யோகர் சுவாமிகள் நற்பணி மன்றமும் காவேரி கலாமன்றமும் இணைந்து பண்டிதர் பரந்தாமன் கவின்கலை கல்லூரி கலையரங்கில் நடாத்தி இருந்தனர்.

பரந்தாமன் கவின் கலைக்கல்லூரியின் துணை நிறுவுனர் திரு.சி.ஜீவநாயகத்தின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நடன நிகழ்வுகள , பாடல்கள், கர்நாடக சங்கீத இசை விருந்துகள், நடைபெற்றது. அதனை தொடர்ந்து போட்டிகளில் பங்கு பற்றியவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டது

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக கிளிநொச்சி தமிழ் உதவிக்கல்விப்பணிப்பாளர் பிரேமா மதுரநாயகம், ஓய்வு நிலை அதிபர் அ .கனகரட்னம், மூத்த சிறுகதை எழுத்தாளர் இ .நடராஜா, கலைஞர்கள், எழுத்தாளர்கள், மக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கலாச்சாரம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments