பெண்களுக்கான ஏற்படும் திருமணம் தடங்கல் நீங்க செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள்

Report Print Jayapradha in கலாச்சாரம்

இந்த காலத்தில் எல்லா அம்சங்களும் நிறைந்த பெண்களுக்கு திருமணம் நடப்பது என்பதே மிகவும் அரிதான செயலாக இருக்கின்றது.

அத்தகைய திருமண தோஷம் உடைய பெண்கள் ஸ்ரீகருடனை வழிபட்டால் தோஷம் நீங்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

திருமண தடைக்கு காரணமான தோஷங்கள்
செவ்வாய் தோஷம்
  • ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோஷம்.செவ்வாய் தோஷம் காரணமாகத் திருமணம் நடைபெறக் காலதாமதம் ஆகும்
ராகு – கேது தோஷம்
  • லக்னம், 2, 7, 8 ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது இருப்பதால் சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. மேலும் ராகு - கேது இருவரும் அவர்கள் கிரகத்தின் வீட்டில் இருக்கிறார்களோ அந்த கிரகத்தின் தன்மையை பிரதிபலிப்பார்கள்
மாங்கல்ய தோஷம்
  • இந்த தோஷம் பெண் ஜாதகத்தில் மட்டுமே காணப்படும், அதாவது லக்னத்துக்கு 8&ம் இடத்தில் சூரியன், ராகு, கேது, சனி போன்ற கிரகங்கள் இருப்பது மாங்கல்ய தோஷமாகும்.
சூரிய தோஷம்
  • ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 7, 8 ஆகிய இடங்களில் சூரியன் இருந்தால் சூரிய தோஷமாகும்.இந்த அமைப்பு உள்ள ஜாதகங்களை அதேபோன்று அமைப்புடைய ஜாதகத்துடன் சேர்ப்பதால் தோஷம் நிவர்த்தியாகிறது.
களத்திர தோஷம்
  • களத்திர ஸ்தானம் என்னும் 7-ம் இடத்தில் களத்திர காரகன் சுக்கிரன் இருப்பது களத்திர தோஷமாகும்.மேலும் இந்த தோஷ ஜாதகங்களுடன் அதே சமதோஷமுள்ள ஜாதகத்தை சேர்ப்பதால் தோஷங்கள் நீங்குகின்றன. திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும்.
செய்ய வேண்டிய பரிகாரங்கள்
  • செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து முருகனுக்கு அர்ச்சனை செய்து வரலாம். வைத்தீஸ்வரன் கோயிலில் பரிகார பூஜை செய்யலாம்.
  • ராகு-கேது தோஷம் உள்ளவர்கள் திருநாகேஸ்வரம், காளஹஸ்தி ஆகிய ஸ்தலங்களுக்கு சென்று வழிபடலாம்.செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கையை வணங்கலாம்.
  • சூரிய தோஷம் உள்ளவர்கள் ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்து பசு மாட்டுக்கு கோதுமையால் செய்த உணவு அளிக்கலாம்.
  • களத்திர தோஷம் உள்ளவர்கள் சுமங்கலி பெண்களுக்கு தேங்காய், பூ, பழம், தாலி கயிறு, மஞ்சள், வெற்றிலை பாக்கு தட்சிணை வழங்கி ஆசி பெறலாம்.
  • பெண்கள் பிறந்த லக்னத்திற்கு 7-ம் வீட்டு அதிபதியின் வாரத்தில் ஸ்ரீகருடனை வழிபட்டு வர வேண்டும் அல்லது 7-ம் வீட்டதிபதி அமர்ந்த வீட்டின் அதிபதியாக யார் இருக்கிறாரோ, அவருக்குரிய வாரத்தில் வழிபடலாம்.

மேலும் கலாச்சாரம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்