உங்க ராசிக்கு எந்த கிழமையில் தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் நிலைக்கும் தெரியுமா?

Report Print Jayapradha in கலாச்சாரம்

பொதுவாக பலரும் நல்ல நாளாக கருதி புதன் கிழமை அல்லது வெள்ளிகிழமை அன்று தங்கம் வாங்குவார்கள்.

மேலும் சிலர் தங்கள் ராசிக்கு ஏற்றவாறு நல்ல நேரம், சுபமுகூர்த்தம் பார்த்த பின் தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்களை வாங்குவார்கள்.

அத்தகைய செல்வம் எப்பொழுதும் வீட்டில் நிலைத்து இருக்க எந்த ராசிகாரர்கள் எந்த கிழமையில் தங்கம் வாங்க வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

மேஷம்

மேஷம் ராசிக்காரர்கள் ஞாயிறு மற்றும் வெள்ளி போன்ற கிழமைகளில் தங்க ஆபரணங்கள் வாங்கினால் செல்வம் எப்பொழுதும் நிலைத்திருக்கும்.

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்கள் புதன் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் ஆபரணங்கள் வாங்கினால் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்கள் திங்கள் மற்றும் வியாழன் கிழமைகளில் தங்க நகைகளை வாங்குவது மிகவும் சிறப்பானது.

கடகம்

கடகம் ராசிக்காரர்கள் ஞாயிறு, திங்கள் மற்றும் புதன் ஆகிய கிழமைகளில் தங்கத்தை வாங்கலாம்.

சிம்மம்

சிம்மம் ராசிக்காரர்கள் புதன் மற்றும் வெள்ளி போன்ற கிழமைகளில் நகைகளை வாங்கினால் சிறப்பாக இருக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு சனி கிழமை மிகவும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதனால் சனிக் கிழமை நகைகள் வாங்கலாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் திங்கள் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் தங்கம் வாங்கினால் அதிர்ஷ்டமாகும்.

விருச்சிகம்

விருச்சிகம் ராசி உள்ளவர்கள் சனிக் கிழமைகளில் தங்கம் வாங்கினால் அதிர்ஷ்டத்தைப் பெறலாம்.

தனுசு

தனுசு ராசி உள்ளவர்கள் வியாழன் கிழமைகளில் தங்கம் வாங்குவது நல்ல அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.

மகரம்

மகரம் ராசி உள்ளவர்கள் புதன் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் தங்கம் வாங்குவதற்கு உகந்த நாட்களாகும்.

கும்பம்

கும்பம் ராசிக்காரர்கள் புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் தங்கம் வாங்குவது நல்ல அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.

மீனம்

மீனம் ராசிக்காரர்கள் வியாழன் மற்றும் திங்கள் ஆகிய நாட்களில் ஆபரணங்கள் வாங்குவதற்கு உகந்த நாட்களாகும்.

மேலும் கலாச்சாரம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்