எந்த ராசிக்காரர்கள் எந்த ராசிக்கல் போட்டா அதிர்ஷ்டம் கொட்டும் தெரியுமா?

Report Print Jayapradha in கலாச்சாரம்

அனைவருக்குமே அதிர்ஷ்டக்கற்கள் அணிந்தால், அதிர்ஷ்டம் மற்றும் செல்வம் கொட்டும் என்ற நம்பிக்கை இருக்கிறது

மேலும் கிரகங்களைப் பொறுத்து அதிர்ஷ்டக் கற்களை அணிந்தால் தான், அதிர்ஷ்டம் கொட்டும்.ஒருவேளை தவறான ராசிக்கற்களை அணிந்தால், அது வாழ்க்கையையே மிகவும் மோசமானதாக்கிவிடும்

எனவே எந்த ராசிக்கு எந்த கற்கள் அணிந்தால் நல்லது நடக்கும் என்பதை தெரிந்து பின்னரே அணிய வேண்டும்.

மேஷம்

மேஷ ராசிகாரர்கள் வைரம் மற்றும் மணிக்கல் உடைய மோதிரம் அணிந்தால் அதிர்ஷ்டம் பொங்கும்.

ரிஷபம்

ரிஷப ராசி உள்ளவர்கள் மரகதக் கல்லை கொண்டு செய்யப்பட்ட மோதிரத்தை அணிந்தால் மிகவும் நல்லது.

மிதுனம்

மிதுன ராசி உள்ளவர்கள் முத்துகளால் செய்யப்பட்ட மோதிரத்தை அணிந்தால் சிறந்த பலனைப் பெறலாம்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் மின்னும் நீல வண்ண முத்தை அணிந்தால் செல்வம் கொழிக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் மாணிக்கக்கல்லை கொண்டு செய்யப்பட்ட மோதிரத்தை அணிந்தால் அதிர்ஷ்டம் கொழிக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் நீலக் கல்லை கொண்டு செய்யப்பட்ட மோதிரத்தை அணிந்தால் எப்போதும் நல்லது நடக்கும்.

துலாம்

துலாம் ராசிகாரர்கள் பச்சை மணிக்கல்லால் ஆன மோதிரத்தை அணிந்தால்அதிர்ஷ்டம் கொடுக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு செவ்வந்திக்கல் மிகுந்த அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.எனவெ அவர்கள் செவ்வந்திக்கல் மோதிரத்தை அணிவது மிகவும் நல்லது

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் புஷ்பராகம் என்னும் அதிர்ஷ்டக்கல்லை அணிவது நல்லது. வேண்டுமெனில், மாணிக்கம் மற்றும் செவ்வந்திக்கல் போன்ற ராசிக்கற்களைக் கூட அணியலாம்.

மகரம்

ஆம்பர் கல்லை மகர ராசிக்காரர்கள் அணிந்தால், வீட்டில் மகிழ்ச்சியுடன், செல்வமும் கொழிக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் கோமேதக கற்களை அணிந்தால், வாழ்க்கையானது சந்தோஷமாகவும், செல்வ செழிப்புடனும் இருக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் நீல பச்சை நிறக்கல்லை அணிந்தால், வலிமையிழந்து இருக்கும் கிரகங்கள் வலிமைப் பெற்று, செல்வத்தைக் கொழிக்கும்.

மேலும் கலாச்சாரம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers