திருமணமான பெண்கள் காலில் மெட்டி, நெற்றியில் குங்குமம் அணிந்து கொள்வது ஏன்?

Report Print Fathima Fathima in கலாச்சாரம்

பொதுவாக திருமணமான பெண்கள் காலில் மெட்டி, நெற்றியில் குங்குமம், அதிகளவில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை அணிந்து கொள்வார்கள்.

சம்பிரதாயமாக இதை பார்த்தாலும் இதற்குள் பல அறிவியல் பூர்வமான உண்மைகள் ஒளிந்திருக்கின்றது என்பது உங்களுக்கு தெரியுமா?

மெட்டி

பெண்கள் தங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது என்பதை உணர்த்துவதற்காக மட்டும் தங்களின் கால் விரல்களில் மெட்டி அணிவதில்லை.

அதில் அறிவியலும் அடங்கியுள்ளது. அதாவது, காலின் இரண்டாவது விரலில் தான் மெட்டி அணியபடும்.

இரண்டாம் விரலில் உள்ள நரம்புகள் பெண்களின் கருப்பையை இணைத்து பின்னர் அது இதயத்துக்கு ஓட்டம் அளிக்கிறது. மெட்டி அணிவதன் காரணமாக கருப்பை பலம் பெறுகிறது.

மேலும், விரலில் மெட்டி அணிவதால் அது இரத்த ஓட்டத்தை சரி ஆக்குவதோடு, மாதவிடாய் சுழற்சியையும் ஒழுங்குபடுத்துகிறது.

நெற்றியில் குங்குமம், திலகம் வைக்கப்படுவது ஏன்?

கண்களின் புருவத்துக்கு இடையில் மனித உடலின் முக்கிய நரம்பு இருப்பதாக பண்டை காலத்திலிருந்தே கூறப்பட்டு வருகிறது. திலகத்தை இந்த இடத்தில் வைப்பதால் உடலில் ஏற்படும் சக்தி இழப்பை அது தடுக்கிறது.

அதே போல, குங்குமத்தை நெற்றியில் வைப்பதால் அது மனித உடலில் சக்தியைத் தக்க வைத்துக் கொள்ளுவதோடு, செறிவுள்ள பல்வேறு நிலைகளை கட்டுப்படுத்தவும் செய்கிறது.

மேலும், குங்குமம் வைக்க நெற்றியில் விரலை வைத்து அழுத்துவதன் மூலம் இரு புருவங்களுக்கு இடையே உள்ள மூன்றாவது கண் என சொல்லபடும், உடலின் ஆறாவது சக்கரமான Adnya-chakraஐ விரல் தானாக அழுத்துகிறது.

காதில் துளையிட்டு தோடுகள் அணிவது ஏன்?

காதுகளில் துளையிட்டு காதணிகள் அணிவது என்பது இந்திய கலாசாரத்தின் முக்கிய அம்சமாகும்.

இதை செய்வதன் மூலம் அறிவாற்றல், சிந்தனை திறன் மற்றும் முடிவெடுக்கும் திறன் வளரும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். மேலும், பேச்சு கட்டுப்பாட்டுகள் சரியாக இருக்க இது உதவுகிறது

மேற்கிந்திய கலாசாரங்களில் கூட விதவிதமான காதணிகளை மக்கள் நாகரீகத்தின் வெளிப்பாடாக அணிகிறார்கள்.

நெற்றி வகுடு பகுதியில் பெண்கள் வைக்கும் செந்தூரம் எதற்காக?

பொதுவாக திருமணமான பெண்கள் தங்கள் தலைமுடி தொடங்கும் நெற்றியின் நடு வகுடில் செந்தூரம் வைப்பார்கள்.

செந்தூரம், மஞ்சள் மற்றும் சுண்ணாம்பு கலந்து செய்யப்படுகிறது. முக்கியமாக இதில் உலோக பாதரசம் கலக்கபடுகிறது.

இந்த கலவையால் உருவான செந்தூரத்தை பெண்கள் தங்கள் மொத்த உணர்ச்சிகளும் மையம் கொண்டுள்ள தலைமுடி ஆரம்பிக்கும் வகுடின் பகுதியில் வைத்து கொண்டால், அது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.

மேலும் கலாச்சாரம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்