டீனேஜ் வயதினரின் டேட்டிங் தொடர்பில் வெளியான தகவல்!

Report Print Givitharan Givitharan in டேட்டிங்

மொபைல் சாதனங்களின் பாவனை இன்று வெகுவாக அதிகரித்ததன் காரணமாக வயது வேறுபாடு இன்றி அனைவரும் மொபைல் சாதனங்களுடனேயே அதிக நேரத்தினை செலவிடுகின்றனர்.

இதன் காரணமாக டீனேஜ் வயதினர் மத்தியில் டேட்டிங் செய்யும் உணர்வு வெகுவாக குறைவடைந்துள்ளதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது தற்போதைய தலைமுறையினரிடம் தமது பெற்றோரின் தலைமுறையினரிடம் காணப்பட்ட டேட்டிங் உணர்வு இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 1995 ஆம் ஆண்டு தொடக்கம் 2012 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் பிறந்தவர்களிடமே இவ் உணர்வு மந்த நிலையை அடைந்துள்ளது.

மேலும் இக் காலப் பகுதியில் பிறந்தவர்களை i-Generation எனவும் ஆய்வில் ஈடுபட்ட Jean Twenge என்பவர் குறிப்பிட்டுள்ளனர்.

இவர் San Diego State பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றிவருகின்றார்.

தற்போது நண்பர்கள், நண்பிகளுடன் தொடர்பினை ஏற்படுத்துவதற்கு மெசேஜ் அப்பிளிக்கேசன்கள் மற்றும் சட் செய்யும் அப்பிளிக்கேஷன்கள் அதிகம் காணப்படுகின்றன.

இதனால் வெளியில் சென்று அவர்களை நேரடியாக சந்திப்பது வெகுவாக குறைவடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் டேட்டிங் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்