காதலர் தினத்திற்காக பணம் கட்டிவிட்டு காத்திருக்கும் இளைஞர்கள்: எங்கு தெரியுமா?

Report Print Kabilan in டேட்டிங்

காதலர் தினத்தில் Dating செல்வதற்காக துணையை ஏற்படுத்திக் கொள்ள ஹாங்காங் இளைஞர்கள் இணையதளம் ஒன்றில் பணம் செலுத்திவிட்டு காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பிப்ரவரி 14ஆம் திகதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காதலனோ அல்லது காதலியோ இல்லாத Singles-களுக்கு, துணையைத் தேடித் தருவதற்கு ஹாங்காங்கில் உள்ள நிறுவனம் ஒன்று புதிய ஏற்பாட்டை செய்துள்ளது.

இதற்காக தங்களுக்கு துணை இல்லாத இளைஞர்கள், இந்நிறுவனத்தில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். இதற்கான கட்டணம் 350 முதல் 450 ஹாங்காங் டொலர் வரை ஆகும்.

இந்த நிறுவனம் காதலர் தினத்திற்கு முந்தைய நாள் நடத்த உள்ள நிகழ்ச்சியில், முன்பதிவு செய்தவர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

அங்கு வரும் ஆணுடனோ, பெண்ணுடனோ பேசி தங்கள் இணையை தெரிவு செய்துகொண்டு, அவர்களுடன் Dating சென்று வரலாம்.

மேலும் இதற்காக அந்நிறுவனம் உருவாக்கியுள்ள Apps-களை பயன்படுத்தியும், தங்களுக்கான துணையை தெரிவு செய்து கொள்ளலாம், ஆனால் நேரில் பார்த்து தெரிவு செய்யவே ஹாங்காங் இளைஞர்கள் விரும்புகின்றனர்.

சீனாவில் ஆண், பெண் விகிதம் மிகவும் குறைவு. அங்கு 1000 பெண்களுக்கு 852 ஆண்கள் தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் டேட்டிங் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்