ரகசிய டேட்டிங்: சித்தார்த் மல்லையா பற்றிய சில உண்மைகள்

Report Print Deepthi Deepthi in டேட்டிங்

விஜய் மல்லையாவின் மகனான சித்தார்த் விஜய் மல்லையா 1987-ம் ஆண்டு மே 7ம் திகதி பிறந்தார்.

இவர் தனது பெயரை சித் மல்லையா என சுருக்கி கொண்டார். சினிமா, மாடலிங், கிரிக்கெட் அணி இயக்குனர் என பல துறைகளில் பிரபலமானவர்.

விஜய் மல்லையாவிற்கும் முன்னாள் ஏர் ஹோஸ்ட் சமிரா மல்லையாவிற்கும் பிறந்த மகனாவார்.

லாஸ் ஏஞ்சலில் பிறந்து, பின் குடும்பத்துடன் இங்கிலாந்து சென்ற இவர் PappleWick பள்ளியிலும், அதன் பிறகு Wellington கல்லூரியிலும், குயின் மேரி பல்கலைகழகத்திலும் பயின்றார். சில காலம் இவர் பெற்றோருடன் துபாயில் தங்கி இருந்தார்.

கல்லூரி காலத்தில் ஹாக்கி வீரரான சித், பல்கலைக்கழக படிப்பினை முடித்தபின் சித் டியாகோ பான நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.

பின்னர் கின்னஸ் பான நிறுவனத்தில் அசிஸ்டெண்ட் மேனேஜராக பணிபுரிந்தார்.

2010-ல் இவர் தந்தை நடத்தி வந்த யூபி குருப்ஸ் கம்பெனிக்கு சொந்தமான ராயல் சேலஞ்சர் பெங்களூர் அணியின் இயக்குனரானார். இந்த அணியில் இவர் இருந்த போது பசுமை திட்டங்கள் எல்லாம் கொண்டு வந்தார்.

2012ல் நோ பவுண்டரிஸ் என்னும் ஆன்லைன் சாட் நிகழ்ச்சியினை இவரே எழுதி தொகுத்து வழங்கி இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இவர் அணியின் வீரர்கள் பங்கு பெற்றனர்.

NDTV Good Times சேனலில் ஒளிபரப்பான தி ஹன்ட் ஆப் கிங்பிஷர் காலண்டர் கேர்ள் என்னும் நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார்.

லேக்மி ஃபேஷன் வீக் 2012-ல் மாடலாகவும் உருவெடுத்தார் சித் மல்லையா, சாந்தனு, நிகில் போன்ற டிசைனர்களின் உடையை அணிந்து இந்தியன் பிரைடல் வீக்கில் ராம்ப் வாக் செய்தார்

2013ம் ஆண்டில் ABC Talent Showcase எனும் நிகழ்ச்சியில் 7000 பேரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 20 பேரில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014 சித் சீசன்ஸ் என்னும் யூடியூப் ஷோ ஒன்றினை ஆரம்பித்தார்.

மேலும், பிராமன் நாமன் என்ற படத்தில் பணக்கார, அழகான பெண்களை மயக்கும் கிரிக்கெட் விளையாட்டு வீரராக ரூனி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ராயல் சேலஞ்சர் அணியில் இருக்கும் போது இவருக்கும் கத்ரீனா கைப் மற்றும் தீபிகா படுகோனே போன்ற பாலிவுட் முன்னணி நடிகைகளுடன் காதல் உறவில் இருந்தார் என்ற கிசுகிசுக்களும் வெளியாக பரபரப்பை உண்டாக்கின.

மேலும் டேட்டிங் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...