90 ஆயிரம் மதிப்புள்ள காலணி: கவர்ச்சி ஆடை: 12 வயது குறைவான இளம் நடிகரை மணக்கும் 45 வயது நடிகை

Report Print Deepthi Deepthi in டேட்டிங்

பிரபல இந்தி நடிகை, மலைக்கா அரோரா தன்னை விட 12 வயது குறைவான இளம் ஹீரோவை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.

நடிகை மலைக்கா அரோரா, அர்பாஸ் கானை காதலித்து 1998ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அர்ஹான் என்ற ஒரு மகன் இருக்கிறார்.

மலைக்கா தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அர்பாஸ் கானை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் இவரும் பிரபல நடிகர் அர்ஜுன் கபூரும் காதலிக்கத் தொடங்கினர். ஒன்றாக விழாக்களுக்குச் சென்று வந்தனர்.

அர்ஜுனுக்கு வயது 33 ஆகும். தன்னை விட 12 வயது மூத்த நடிகையை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.

இவர்கள் இருவரும் அடிக்கடி ஒன்றாக வெளியில் செல்வது தற்போது அதிகமாகிவிட்டது. மேலும், மலைக்கா அரோரா தனது வயதையும் மறந்து மிகவும் கவர்ச்சியாக ஆடை அணிந்து வருவது விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.

நேற்று தனது காதலருடன் இணைந்து மும்பையில் உள்ள ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அதன்போது, மலைக்கா ரூ. 90 ஆயிரம் மதிப்பிலான காலணியை அணிந்து சென்றுள்ளார்.

இவருடன் சென்று காதலர் அர்ஜுன், தனது முகத்தினை மறைத்துக்கொண்டு சென்றுள்ளார்.

மேலும் டேட்டிங் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்