அகில இலங்கை இந்து மாமன்றத்திற்கு புதிய தலைவர் தெரிவு

Report Print Akkash in அபிவிருத்தி

அகில இலங்கை இந்து மாமன்றத்திற்கு புதிய தலைவராக மாணிக்கம் தவயோகராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

புதிய தலைவரை தெரிவு செய்யும் நிகழ்வு இன்று அகில இலங்கை இந்து மாமன்றத்தில் நடைபெற்றது.

மாணிக்கம் தவயோகராஜா, அகில இலங்கை இந்து மாமன்றத்தின் நீண்டகால உறுப்பினரும், பிரதித்தலைவராகவும் இருந்துள்ளார்.

அண்மையில் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி கந்தையா நீலகண்டன் தமது 70 ஆவது வயதில் காலமானார்.

இவரது இடத்திற்கே மாணிக்கம் தவயோகராஜா இன்று புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் அபிவிருத்தி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்