இலங்கை வர்த்தக நுழைவாயில் அறிமுகவிழா

Report Print Sinan in அபிவிருத்தி

இலங்கை வர்த்தக நுழைவாயில் (SLTIP) இன்று கொழும்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலமாக, இலங்கை வர்த்தக சமுதாயம் இப்போது இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கான சட்ட ரீதி தேவைப்பாடுகள் மற்றும் நடைமுறைகளைப் பற்றிய தகவலைப் பெற ஒரு ஒற்றையிடத்திலான வலைத்தளத்தை உருவாக்கியுள்ளது.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் முன்னிலையில் குறித்த செயற்றிட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வர்த்தக திணைக்களம் மற்றும் தேசிய வர்த்தக வசதிகள் குழுவின் ஒத்துழைப்பின் மூலமும், உலக வங்கியினதும் மற்றும் ஆஸ்திரேலிய உயர்ஸ்தாணிகராலயம் என்பவற்றின் உதவியுடனும் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள இந்த வர்த்தக நுழைவாயில், இலங்கை வர்த்தக சூழலின் முன்னறிவிப்பு மற்றும் வெளிப்பாட்டுத் தன்மையை மேம்படுத்துதல் மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு துரிதமாகவும் தேவையான சந்தர்ப்பத்திலும் வர்த்தக விதிகளையும் நடைமுறைகளையும் பெற வசதியளிக்கின்றது.

SLTIP எல்லை வர்த்தகத்துடன் தொடர்புடைய தகவல்களை அணுகுவதற்கும், உலக வர்த்தக அமைப்பின் வர்த்தக உதவிகளுக்கான உடன்படிக்கைக்கு இணங்குவதற்குமான சமீபத்திய அரசாங்க முயற்சியாகும்.

ஆங்கில, சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் சட்டங்கள், நிர்வாக நடைமுறைகள், வழிகாட்டுக் குறிப்புகள், படிவங்கள், உரிமங்கள், அனுமதிகள் மற்றும் செலுத்த வேண்டிய கட்டணங்கள் போன்ற வர்த்தக விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளை இந்த நுழைவாயில் கொண்டுள்ளது.

மேலும் அபிவிருத்தி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்