உயர்ந்தது இலங்கை ரூபாயின் பெறுமதி

Report Print Steephen Steephen in அபிவிருத்தி

2019 ஆம் ஆண்டில் நடந்து முடிந்த காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு ஈடாக இலங்கை ரூபாயின் பெறுமதி 4.6 வீதமாக அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வாராந்தம் வெளியிடும் புள்ளிவிபரங்களுக்கு அமைய பிரித்தானியாவின் ஸ்ரேலிங் பவுண், ஜப்பான் யென், இந்திய ரூபாய் ஆகிய நாணயங்களுக்கு இணையாக இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளது.

உலக நிதி நிலைமை தளர்வடைந்தமை மற்றும் அமெரிக்கா உட்பட பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகள் தமது நிதி கொள்கைகளில் மாற்றங்களை செய்த காரணத்தினால், அரச காப்பீட்டு சந்தைக்கு வெளிநாடு முதலீடுகள் வருவது அதிகரித்துள்ளது என மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

இந்த அதிகரிப்பு நிலைமை மற்றும் ஏற்றுமதியாளர்களின் வருமானம் ரூபாயாக மாற்றமடைந்தமை, பண்டிகை காலத்தில் வெளிநாடுகளில் தொழில்புரிவோர் நாட்டுக்கு பணத்தை அதிகளவில் அனுப்பி வைத்தமை ஆகிய காரணங்களினால் அமெரிக்க டொலர் மற்றும் ஏனைய நாணயங்களுக்கு இணைய ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளது.

அதேவேளை இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள வெளிநாட்டு நாணய மாற்று வீதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 176.45 ரூபாயாகவும் கொள்முதல் விலை 172.61 ரூபாயாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும் அபிவிருத்தி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers